ஈஸ்டர் தாக்குதல் விசாரணை - கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயணத் தடை!
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டை நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும், இந்த விசாரணைகள் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவும் சந்தேக நபராக இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கமைய இவ்வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )