டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரிப்பு!

#SriLanka #Dengue #Patients #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக  அதிகரிப்பு!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றை தினம் மாத்திரம் 843 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும், 19,943 டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, மேற்கு மாகாணத்தில் 39,667 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,610 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

 ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோய்த்தொற்றால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!