கற்பிட்டியில் ‘ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைத்திட்டங்கள்’ ஆரம்பம்!

#SriLanka #Project #Lanka4 #Village #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 week ago
கற்பிட்டியில் ‘ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைத்திட்டங்கள்’ ஆரம்பம்!

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டுகை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் மூலம் நாடு பூராவும் முன்னெடுக்கப்பட உள்ள ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைத்திட்டங்கள் எனும் நிகழ்ச்சி திட்டம் கற்பிட்டி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாலக்குடா மற்றும் புதுக்குடியிருப்பின் தில்லையடி கிராமம் ஆகிய இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எம் ஜே எம் பைசலின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 25,000 மில்லியன் ரூபாய் செலவில் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கிராமங்களில் இருந்து ஆரம்பிக்கும் அரசின் நோக்கை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள 

ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைத்திட்டங்கள் எனும் எண்ணக்கருவிற்கு அமைய பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் இவ் வருடத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு என 83 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 

இதன்போது தெரிவிக்கப்பட்டது கற்பிட்டி பிரதேச செயலகத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைத்திட்டங்களுக்காக இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பாலக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிநபர் வறுமை ஒழிப்புத்திட்டம் எனும் அடிப்படையில் 10 பயனாளிகளுக்கு நந்தியாவட்டை மலர் (இந்தமல்) வளர்ப்புக்கான மலர் செடிகள் உபகரணங்கள் முழுமையாக வழங்கி வைக்கப்பட்டது. 

புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள தில்லையடி கிராமத்தை மையமாகக் கொண்ட உப்பு உற்பத்தியாளர்கள் கடல் நீரை பெற்று கொள்வதில் நீண்ட காலமாக எதிர் நோக்கி வரும் கொலுசு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முகமாக புதிதாக கடல் நீரை சீராக பெற்றுக் கொள்ளும் வகையில் நவீன முறையில் அமைந்த புதிய சொலுசு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ். எம். றிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் அதிகாரி கே.பீ.சீ.ஜீ குலசேகர, மற்றும், செயலகத்தின் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கற்பிட்டி நகர பிரஜா சக்தி தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4