கரவெட்டி கிராமத்திற்கு நேரடி களவிஜயம்; மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

#SriLanka #people #Lanka4 #Village #Visit #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கரவெட்டி கிராமத்திற்கு நேரடி களவிஜயம்; மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

கரவெட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் களவிஜயம். மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ செல்வக்குமார் அவர்களினதும், ஆதவன் விளையாட்டுக் கழகத்தினரினதும் அழைப்பினை ஏற்று கரவெட்டி கிராமத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இக் களவிஜயத்தின் போது கிராம மக்களுடன் விரிவாக கலந்துரையாடியபோது, அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் பிரதானமாக, கரவெட்டி அ.த.க. பாடசாலையை தரமுயர்த்தி மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆரம்பக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாடசாலையின் தரமுயர்விற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கரவெட்டி மீனவர் சங்கத்திற்கான நிரந்தரக் கட்டிட வசதி இன்மை, விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு தேவைகள், குடிநீர், வீதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நேரடியாகக் கேட்டு அறிந்து, அவற்றிற்கான நிலையான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை இவ்வேளையில் உறுதியளிக்கிறேன்.

மக்களுடன் இணைந்து – மக்களுக்காக! கரவெட்டியின் முன்னேற்றப் பயணத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!