உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் 22 பேர் மரணம்
மாஸ்கோ ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இரவோடு இரவாக உக்ரைன் மீது ரஷ்யா 656 ஆளில்லா விமானங்களையும் 73 ஏவுகணைகளையும் ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவ், மத்திய நகரமான டினிப்ரோ மற்றும் கிழக்கு நகரங்களான போல்டாவா, கார்கிவ் மற்றும் சபோரிஷியா ஆகியவை முக்கிய இலக்குகளாக இருந்துள்ளது.
உக்ரைனிய வான் பாதுகாப்புப் படை, 40 ஏவுகணைகளையும் 602 ஆளில்லா விமானங்களையும் அழித்து செயலிழக்க செய்ததாக கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )