வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் 24.5 சதவீதத்தால் அதிகரிப்பு!

#SriLanka #Dollar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
வெளிநாட்டு  பணப் பரிமாற்றங்கள் 24.5 சதவீதத்தால் அதிகரிப்பு!

புலம் பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு  அனுப்பப்படும் பணத்தின் மதிப்பு 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களால்  2,460.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், இந்த வவருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 3,062.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

சமீபத்திய மாதங்களில் காணப்பட்ட நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதேவேளை வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், திறமையான தொழிலாளர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4