செவிலியர் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பு - விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
#SriLanka
#Nurse
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Applications
Thamilini
1 month ago
இவ்வாண்டில் 3000 பயிற்சியாளர்களை செவிலியர் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு மற்றும் அது தொடர்பான விவரங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
குறித்த விண்ணப்பங்கள் www.health.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் லட்சுமேந்திர தமயந்தகுமார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
2021, 2022, 2023, 2024 போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியல் அல்லது இயற்பியல் பாடங்களைப் பயின்று, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே