IPL சமர் : இரண்டாவது முறையாக மகுடம் சூடியது RCB அணி!

#SriLanka #IPL #sports #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
IPL  சமர் : இரண்டாவது முறையாக மகுடம் சூடியது RCB  அணி!

2026 ஆம் ஆண்டுக்கான IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் அகமதாபாதின் நரேந்திரமோடி  மைதானத்தில் இடம்பெற்ற இறுதிபோட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. 

நாணயச்சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

 தொடர்ந்து 156 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்.சி.பி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிவாகை சூடியது. 

இறுதிவரை களத்தில் நின்ற  விராட் கோலி, வெறும் 25 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது அதிவேக அரை சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். 

அவர்  42 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து அணிக்கு வலுச்சேர்த்தார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4