ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!! வெள்ளவத்தை அருகில் சம்பவம்!
#SriLanka
#Accident
#Train
#wellawatte
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பானந்துறையில் இருந்த கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலே பெண் மீது மோதியுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் விபத்து நடந்தபோது அப்பெண் வெள்ளை மற்றும் பழுப்பு நிறச் சேலை அணிந்து, பச்சை நிறப் பை ஒன்றை வைத்திருந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது களுபோவில போதனா மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )