தீவுகளை அழகிய சுற்றுலாத்துறைக்கு வித்திடுவதற்கான பிரதி அமைச்சரின் களவிஜயம்

#SriLanka #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தீவுகளை அழகிய சுற்றுலாத்துறைக்கு வித்திடுவதற்கான பிரதி அமைச்சரின் களவிஜயம்

கற்பிட்டி தீவுகளை உள்ளடக்கிய அழகிய சுற்றுலா வலயத்தை, சூழலுக்கு இணக்கமான மற்றும் நிலையான முறையில் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டு சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்கவின் தலைமையில் விசேட கள விஜயம் ஒன்று கற்பிட்டி தீவுப் பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. 

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது பாரம்பரிய மீனவ மக்களின் தொழில்சார் கண்ணியமும் உரிமைகளும் அதிகபட்சமாகப் பாதுகாக்கப்படும் வகையில், நாட்டுக்கு வெளிநாட்டு நாணயத்தை (டொலர்களை) ஈட்டித்தரக்கூடிய நவீன சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மீனவ மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்களை வலுவாகச் செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் ஏன்ற ரீதியில் உறுதியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ் விஜயத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) இயக்குநர் மற்றும் திட்டமிடல் இயக்குநர், புத்தளம் மாவட்ட சுற்றுலா விவகார ஒருங்கிணைப்பாளர் நிமல் பத்திரண, கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளரும் கற்பிட்டி பிரிவுக்கு பொறுப்பான சுற்றுலா விவகார அதிகாரியுமான சமன் குமார ஹேரத், கற்பிட்டி பிரிவின் சுற்றுலா விடுதிகளுக்குப் பொறுப்பான அதிகாரி மனோஜ் ரத்நாயக்க மற்றும் டச்பே பிரிவின் பிரஜா சக்தி தலைவர் சசி கயான் ஆகியோர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4