நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

#SriLanka #weather #today #Country #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
13 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

இலங்கை தீவைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று (South-west monsoon) நிலைபெற்றுள்ளதன் காரணமாகவே இந்த மழையுடனான காலநிலை தொடர்கிறது. அதிக மழை பெய்யக்கூடிய பகுதிகள்: மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னரே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இலங்கையைச் சூழவுள்ள வான்பரப்பில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்கு பின்னரே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!