இலங்கை பொருளாதாரம் மீண்டும் ஆபத்தில்? – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் ஒரு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஓரளவு மீண்டு வருவதாகக் கூறப்பட்டாலும், அண்மைக்கால உலகளாவிய மற்றும் உள்ளூர் நகர்வுகள் இந்த ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன.
ரூபாயின் சதி மற்றும் மத்திய வங்கியின் தோல்வி: அண்மைய நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து (டாலர் ஒன்றின் மதிப்பு 350 ரூபாயைக் கடந்து) வருகின்றது. மத்திய வங்கி (CBSL) இதனை முன்கூட்டியே கணித்து தடுக்கத் தவறிவிட்டதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தி
யத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 98 மில்லியன் டாலரிலிருந்து 522 மில்லியன் டாலராக, அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது நாட்டின் டாலர் இருப்பை கடுமையாகப் பாதித்துள்ளது.
குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை (Forex Reserves) தற்காலிகமாகப் பாதுகாப்பதற்காக, மோட்டார் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்களுக்கு (LC) அரசாங்கம் திடீரென 50% கூடுதல் வரியை விதித்துள்ளது. இது சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரே நாளில் 9,400 க்கும் மேற்பட்ட கடன் கடிதங்கள் பதியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக அரசாங்கம் கூறினாலும், சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான 'Fitch Ratings' இலங்கையை இன்னும் 'CCC+' என்ற ஆபத்தான மட்டத்திலேயே வைத்துள்ளது. இதனால் இலங்கையினால் சர்வதேச மூலதனச் சந்தைகளில் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியாத நிலை தொடர்கிறது.
18 ஆவது IMF திட்டத்திற்கான தேவை: தற்போதைய 3 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவிகள் போதாது என்றும், தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இலங்கை விரைவில் 18 ஆவது முறையான IMF திட்டத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(வீடியோ இங்கே )