நாளை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்
#Tamil Nadu
#Delhi
#Lanka4
#Vijay
#ChiefMinister
#NarendraModi
Prasu
1 hour ago
இந்திய பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி கோரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விஜய் வழங்கவுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் உள்ளிட்ட பகுதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
(வீடியோ இங்கே )