அமெரிக்கா - ஈரான் இடையில் ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி!

#SriLanka #America #War #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
அமெரிக்கா - ஈரான் இடையில் ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி!

அமெரிக்கா - ஈரான் இடையில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இருப்பினும் யுரேனியம் எவ்வாறு அகற்றப்படும் செறிவூட்டலுக்கான தடைக்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஆகவே இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுவதற்கும் ஈரான் கொள்கையளவில் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு, தனது அணுசக்தித் திட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது உறுதிமொழிகளை ஈரான் நிறைவேற்றினால் மட்டுமே, தடைகள் தளர்த்தப்பட்டு, ஈரானிய சொத்துக்கள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் என்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4