அமெரிக்க தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த கனேடியர் கைது
அமெரிக்காவில் பல வருடங்கள் வசித்து வரும் கனேடியர் ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல அரசு தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சன்னி மேன்ஹெர்ட்ஸ் என்ற 40 வயதுடைய அந்த நபர் மீது, வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் போலியானது என்று தெரிந்தே வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த நபர் 1987 பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்பாளராக மாறியுள்ளார்.
இவர் பாஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள சாகஸ் என்னும் பகுதியில் வசித்து வந்தார். அமெரிக்காவில் வாக்குப்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ பதிவுப் படிவங்களில், தான் ஒரு "அமெரிக்கக் குடிமகன்" என்று இவர் தவறான தகவலைக் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கக் குடியுரிமை இல்லாத நிலையிலும், அவர் பல தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
(வீடியோ இங்கே )