ஈரான் மீது மீண்டும் போர் - இஸ்ரேல் கொடுத்த முக்கிய தகவல்! (வீடியோ இணைப்பு)

#Israel #War #Lanka4 #Iran #ImportantNews #World #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
ஈரான் மீது மீண்டும் போர் - இஸ்ரேல் கொடுத்த முக்கிய தகவல்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை படுகொலை செய்பவர்களுக்கு சுமார் 558.87 கோடி ரூபாய் (50 மில்லியன் யூரோ / 58 மில்லியன் டொலர்) பரிசுத்தொகை வழங்கப்படும் என ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி (Ebrahim Azizi) இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். "இஸ்லாமிய குடியரசின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பரஸ்பர நடவடிக்கை" என்ற தலைப்பின் கீழ் இந்தச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணுஆயுத விவகாரம் மற்றும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒரு கூட்டுத் தாக்குதலை நடத்தின.

இது இருதரப்புக்கும் இடையே கடுமையான போராக மாறியது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் விமானப்படை தளங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திப் பதிலடி கொடுத்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!