ரயில் டிக்கெட்டுக்கு ரூ.36,000 ஏமாற்றப்பட்ட ஜெர்மன் பெண்: பொலிசில் புகார்!

#SriLanka #Complaint #Lanka4 #Train #Germany #Ticket #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
ரயில் டிக்கெட்டுக்கு ரூ.36,000 ஏமாற்றப்பட்ட ஜெர்மன் பெண்: பொலிசில் புகார்!

அம்பேவெலா ரயில் நிலையத்திலிருந்து எல்லா ரயில் நிலையம் வரை பயணம் செய்ய 3 ரயில் டிக்கெட்டுகளுக்காக செலுத்த வேண்டிய ரூ.7,500க்கு பதிலாக ரூ.36,000 செலுத்தி டிக்கெட்டுகளை பெற வேண்டியதாக நிலை ஏற்பட்டதாக தெரிவித்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக எல்லா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எடலூயிஸ் லொம்மர்ஸ் (Edalouise Lommers) என்ற ஜெர்மன் பெண்ணே இந்த புகாரை பொலிஸில் பதிவு செய்துள்ளார். இணையம் மூலம் தாம் அம்பேவெலா ரயில் நிலையத்திலிருந்து எல்லா வரை பயணம் செய்ய 3 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், அதற்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.7,500 மட்டுமே இருந்தபோதிலும், ரூ.36,000 செலுத்த வேண்டியதாக ஏற்பட்டதாகவும் அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தொகை வசூலிக்கப்பட்ட சம்பவத்துடன் ரயில்வே திணைக்களத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பயணிகள் வேறு இணைய தளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குறித்த புகார் எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எல்லா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!