படிப்படியாக நிலைப்பெற்று வரும் தென்மேற்குப் பருவமழை!! மக்களின் கவனத்திற்கு!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
படிப்படியாக நிலைப்பெற்று வரும் தென்மேற்குப் பருவமழை!! மக்களின் கவனத்திற்கு!

தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீது படிப்படியாக நிலைப்பெற்று வருகின்ற நிலையில், பரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கூரிய  சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும்.

இதற்கிடையில், பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!