இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி: மத்திய கிழக்கு பதற்றத்தால் வருவாய் சரிவு!

#SriLanka #Lanka4 #Tourism #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Middle East
Abi
2 hours ago
இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி: மத்திய கிழக்கு பதற்றத்தால் வருவாய் சரிவு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. 

ஆனால், நடப்பு 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரமே பதிவாகியுள்ளது. 

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.8 வீதத்தினால் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும். இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், 2026 ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 135,643 ஆகக் குறைவடைந்துள்ளது.

 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான ஒட்டுமொத்த சுற்றுலாத்துறை நிலவரத்தையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 896,884 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் அந்த எண்ணிக்கை 2.3 வீதத்தால் குறைவடைந்து 876,277 ஆகப் பதிவாகியுள்ளது.

2025 இல் ஈட்டப்பட்ட 1,379 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2026 இல் ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 19.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு மற்றும் வருமான வீழ்ச்சி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!