அம்பாறையில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் வைத்தியசாலையில்!

#SriLanka #Ampara #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் வைத்தியசாலையில்!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். 

பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவரை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர். இருப்பினும் குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதன்போது  நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். 

அப்போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தேகநபர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!