யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் மௌனிக்கப்பட்ட நீதி - நிழல்கள் ரவி உருக்கம்!

#SriLanka #War #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் மௌனிக்கப்பட்ட நீதி - நிழல்கள் ரவி உருக்கம்!

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். 

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர். கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது.

 இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. இந்த யுத்தத்தில் பல போர் குற்றங்கள் இடம்பெற்றன. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

 அத்துடன் பாதிக்கப்பட்ட இனம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் முடிவுக்கு வந்தால்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும். எமது தொப்புள்கொடி உறவுகள் உயிர்களை, உடைமைகளை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

 ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை அந்த உறவுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எடுத்துக்கூற விரும்புகிறேன். என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார் என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!