இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசமுறை பயணத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்தார்.
இதற்கமைய முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு ஒப்பந்தம், பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு மணி நேர குறுகிய பயணமாகச் சென்ற பிரதமர் மோடி, ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அடுத்து அங்கிருந்து நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
(வீடியோ இங்கே )