வலுவிழக்கும் தாழமுக்கம் : சில இடங்களில் 100 மி.மீற்றர் மழை பெய்யும்!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் சுமார் 100 மி.மீ. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )