7 கோடி பேருக்கு எச்சரிக்கை - தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிரடி!

#Lanka4 #technology #Warning #Word #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
7 கோடி பேருக்கு எச்சரிக்கை - தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிரடி!

இணையதளங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (CSAM) தேடுபவர்களுக்கு அல்லது அணுக முயல்பவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 மில்லியனுக்கும் (7 கோடி) அதிகமான எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக 'லூசி பெய்த்ஃபுல்' அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கூகுள், டிக் டொக் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் சட்டவிரோதத் தேடல்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு, அந்தச் செயலின் விபரீதத்தை விளக்கும் எச்சரிக்கைகள் அனுப்பப்படுவதுடன், அவர்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

7 கோடி பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் பேர் (700,000) 'Stop It Now' போன்ற உதவித் தளங்களை அணுகியுள்ளனர். உதவி தேடி வருபவர்களில் ஐந்தில் நான்கு பேர் அந்த வளங்களைப் பயன்படுத்துவது சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், 7 கோடி பேருடன் ஒப்பிடுகையில் 7 லட்சம் பேர் மாத்திரமே உதவி தேடியிருப்பது ஏமாற்றமளிப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகொனொமிக்ஸின் பேராசிரியர் சோனியா லிவிங்ஸ்டோன் கவலை வெளியிட்டுள்ளார்.

இணையதளங்களை உருவாக்கும் போதே 'பாதுகாப்பு' (Safety by design) என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என்றும், AI தளங்களிலும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4