கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் நெத்தலியாற்றுப்பகுதியில் கடந்த 15 வருட காலமாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் ஆற்றுப்பகுதிக்கு அருகில் விவசாய செய்கையை மேற்கொண்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் ஆற்றுப்படுக்கைகள் அரச காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக 15 வருட காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதன் காரணமாக இப்பகுதிகளில் வாழும் விவசாயிகளின் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வனவிலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகிய வருகின்றன. உரிய அதிகாரிகள் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே