கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக சட்ட நிபுணர் லூயிஸ் ஆர்பர் நியமனம்

#Canada #government #Governor #Lanka4 #L4
Prasu
1 month ago
கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக சட்ட நிபுணர் லூயிஸ் ஆர்பர் நியமனம்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற சட்ட நிபுணர் லூயிஸ் ஆர்பர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மார்க் கார்னி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் கார்னி, "சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்ட ஒருவரே இப்பதவிக்குத் தகுதியானவர்.

அந்த வகையில் தனது வாழ்நாள் முழுவதையும் அந்த கொள்கைகளுக்காக அர்ப்பணித்த லூயிஸ் ஆர்பரை நியமிக்குமாறு நான் மன்னரிடம் பரிந்துரை செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

பிரதமர் கார்னியின் இந்தப் பரிந்துரைக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் அளித்துள்ளார். 

புதிய ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள லூயிஸ் ஆர்பர், கனடிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

அதுமட்டுமின்றி, ஐநா மனித உரிமைகள் ஆணையராகவும், ருவாண்டா மற்றும் முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி சர்வதேச அளவில் தடம் பதித்தவர்.

2021ம் ஆண்டில் கனடிய ராணுவத்தில் நிலவிய பாலியல் அநார்த்தங்கள் குறித்த சுதந்திரமான விசாரணையை வழிநடத்தி, 48 முக்கிய பரிந்துரைகளை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

கனடாவின் உயரிய குடிமை விருதான 'ஆர்டர் ஆஃப் கனடா'மற்றும் 42 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வரும் ஜூலை மாதம் பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய ஆளுநர் நாயகம் மேரி சைமனுக்குப் பிறகு பொறுப்பேற்பார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4