IPL M44 - தொடரில் இரண்டு முறையும் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Mumbai #2026
Prasu
1 month ago
IPL M44 - தொடரில் இரண்டு முறையும் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

அந்தவகையில், மும்பை அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மும்பை சார்பில், சிறப்பாக விளையாடிய ரிக்கல்டன் 37 ஓட்டங்களும் நமன் திர் 57 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில், ருதுராஜ் கெய்க்வாட் 67 ஓட்டங்களும் கார்த்திக் சர்மா 54 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4