IPL M41 - இமாலய இலக்கை இலகுவாக அடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

#Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #Mumbai #2026
Prasu
1 month ago
IPL M41 - இமாலய இலக்கை இலகுவாக அடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

19வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களுக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில், ரிக்கெல்ட்டன் 123 ஓட்டங்களும் ஜாக்ஸ் 46 ஓட்டங்களும் பாண்டியா 31 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 244 என்ற இமாலய இலக்கை நோக்கி கமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணி சார்பில், தொடங்கும் முதல் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 45 ஓட்டங்களும் டிராவிஸ் ஹெட் 76 ஓட்டங்களும் கிளாசன் 65 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4