சிக்னல்களை முடக்கும் கிட்கேட் 'Break Mode' உறை: புதிய டிரெண்ட்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சிக்னல்களை முடக்கும் கிட்கேட் 'Break Mode' உறை: புதிய டிரெண்ட்!

"Take a Break" (ஓய்வு எடுங்கள்) என்ற தனது புகழ்பெற்ற வாசகத்திற்குப் புதிய உயிர் கொடுக்கும் வகையில், கிட்கேட் நிறுவனம் கையடக்கத் தொலைபேசிகளின் சிக்னல்களைத் துண்டிக்கும் விசேட "பிரேக் மோட்" (Break Mode) உறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிட்கேட் பனாமா மற்றும் 'ஓகில்வி கொலம்பியா' ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த உறையின் உள்ளே உங்கள் ஸ்மார்ட்போனை வைக்கும்போது, அது வைஃபை (Wi-Fi), மொபைல் நெட்வொர்க் மற்றும் புளூடூத் போன்ற அனைத்து அலைகளிலிருந்தும் தொலைபேசியைத் துண்டித்து விடுகிறது.

இதன் மூலம் எவ்வித அழைப்புகள் அல்லது அறிவிப்புகளின் (Notifications) தொந்தரவுமின்றி நுகர்வோர் தங்களது கிட்கேட் சொக்லேட்டை ரசித்துச் சாப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த உறை சாதாரணமாகத் தெரிந்தாலும், இதன் உள்ளே செம்பு (Copper), பொலியஸ்டர் மற்றும் பாலிபுரோப்பிலீன் ஆகியவற்றால் ஆன ஒரு சிறப்பு அடுக்கு (Faraday Cage) தொழில்நுட்பம் உள்ளது.

ரேடியோ அலைகள் இந்த உலோகப் பரப்பின் வழியே செல்ல முயற்சிக்கும்போது, அதிலுள்ள துகள்கள் சிக்னல்கள் உள்ளே ஊடுருவுவதைத் தடுக்கின்றன.

 இத்தகைய தொழில்நுட்பம் பொதுவாக இணையப் பாதுகாப்பு மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்புப் பிரிவுகளில் ரகசியக் கசிவைத் தடுக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு உறை ஒரு வருடம் வரை தனது செயல்திறன் குறையாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆயுட்காலம் முடிந்த பிறகு, சுற்றுசூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை முழுமையாக மறுசுழற்சி (Recycle) செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான இணையப் பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளத் தாக்கங்களிலிருந்து மக்களைச் சிறிது நேரம் விடுவித்து, நிஜ உலகில் நேரத்தைச் செலவிட வைப்பதே இப்புதிய முயற்சியின் நோக்கமாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4