IPL M33 - மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி சாதனை வெற்றி

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Mumbai #2026
Prasu
1 month ago
IPL M33 - மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி சாதனை வெற்றி

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மும்பை வான்கடே மைதானத்தில் 33வது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில், ருதுராஜ் கெய்க்வாட் 22 ஓட்டங்களும் டிவால்ட் பிரேவிஸ் 21 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 208 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 104 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மும்பை அணி சார்பில், சூர்யகுமார் யாதவ் 35 ஓட்டங்களும் திலக் வர்மா 37 ஓட்டங்களும் அடித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4