IPL M33 - மும்பை அணிக்கு எதிராக 207 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Mumbai #2026
Prasu
2 months ago
IPL M33 - மும்பை அணிக்கு எதிராக 207 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மும்பை வான்கடே மைதானத்தில் 33வது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில், ருதுராஜ் கெய்க்வாட் 22 ஓட்டங்களும் டிவால்ட் பிரேவிஸ் 21 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4