முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகர் அஜித் குமார்

#India #Election #Vijay #ajith
Soruban
1 month ago
முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகர் அஜித் குமார்

இந்தியாவின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கு வருகை தந்த நடிகர் அஜித் குமார், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

வெள்ளை நிற உடையில் வந்திருந்த அவர், தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டி புகைப்படங்களுக்குத் தோற்றமளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!