தமிழக முதலமைச்சராக போவது விஜய்யா?

#India #Election #Tamil Nadu #Actor #Lanka4 #Vijay #ChiefMinister #Politician
Prasu
1 hour ago
தமிழக முதலமைச்சராக போவது விஜய்யா?

தமிழகத்தில் இன்று தபால்மூலம் வாக்களிப்போர் இராணுவம் , பொலீஸ் , அரச ஊழியர்கள் வாக்களித்துவரும் நிலையில் நாளை தேர்தல் நடைபெறுகிறது! திமுக, அதிமுக என இருபெரும் துருவ மெகா பெருங்கூட்டணிகளுக்கு மத்தியில் புதிதாக சுயம்பாக தனிக்கட்சி ஆரம்பித்து, எடுத்த எடுப்பிலேயே மாபெரும் மக்கள் எழுச்சியை திரட்டும் வல்லமையை கொண்டிருக்கிறது தவெக. 

இதுவரை யாரும் கண்டிராத தேர்தல் புரட்சியை விஜய் அவர்களின் தவெக கட்சி செய்துள்ளது ! தமிழ்த்தேசியம் வெல்ல வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை! 

ஆனால் இன்றைய சூழலில் வெல்வதற்கு வாய்ப்புண்டா என்றால் இல்லை என்பதே நிலைப்பாடு ! மாறாக இதுவரை பெற்ற வாக்குவங்கியையே இழக்கும் தருவாயில் தள்ளாடுகிறது அப்போ இன்றைய சூழலில் தம்வாழ்வில் மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களுக்கு தவெக வைத்தவிர வேறுமார்க்கமில்லை! 

images/content-image/1776878207.jpg

இல்லையேல் (திமுக / அதிமுக)வேதாளம் மறுபடி முருங்கைமரம் ஏறும் ! 5 ஆண்டுகள் எந்த முன்னேற்றமுமில்லது போதைவஸ்து , பாலியல்வன்கொடுமை , காவல்துறையின் கிடுக்குப்பிடியில் கூட சிக்குண்டு கொலை கொள்ளை கற்பழிப்பு ,ஆணவக்கொலை , அரச அதிகாரிகளின் கைகளில் நீதி தடுமாறி குப்புற நிலத்தில் விழும் இவைதவிர ஆற்றுமணல்கொள்ளை , நில அபகரிப்புக்கள் சினிமாக் கொள்ளை அட்டூழியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறும் ! பல இலட்சம் கோடி கடன் மத்திய அரசிடம் பெற்று மறுபடி தேர்தல் நேரத்தில் இலஞ்சம்கொடுத்து வாக்கு வங்கியைப்பெறலாம் என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகள் மமதைகொள்வர் .அதி உச்ச பேயாட்டங்கள் மாவட்டங்கள் தோறும் இதுபோல் ஆயிரமாயிரம் அரங்கேறும் . 

ஆனால் விஜயின் அரசியல் வியூகம் இவற்றையெல்லாம் அடித்து துவசம் பண்ணியுள்ளது ! சிறு பிள்ளைகள் முதல் பெண்கள் , இளைஞர் யுவதிகளின் எண்ணத்தில் தாமாகவே வாக்காளர் அட்டைகளை பூர்த்திசெய்து கையில்வைத்துக்கொண்டிருப்பதும், புதிய வாக்காளர்களின் வாக்களிக்கவேண்டும் என்ற அக்கறை அனைத்துமே விஜய்க்கு பிளஸ் ஆகும் .

விஜய் தனித்து நின்று களம் காண்பது தன் அசுர வளர்ச்சி பலத்தை பங்குபோடாமல் தவிர்த்தது மிகமிக நன்று ! அத்தோடு கோவில் ,சர்ச்சு , மசூதியென சென்று அத்தனை மக்களின் அன்பைப்பெற்றது மிகப்பெரிய வரப்பிரசாதம் .விசில் சின்னம் கிடைத்தது அதைவிட மிகமிகப்பெரிய அதிர்ஸ்டம் . 

images/content-image/1776878224.jpg

ஊதித்தள்ளுறாங்க சிறுவர்முதல் பெரியவர்வரை ! மக்களிடம் எளிமையாக தூக்கிச் சென்று சேர்க்க கூடிய சின்னமானது விசில் என்பது இன்னுமொரு கூட்டலே! சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவை விஜய் பெற்றுள்ளார்.

அந்த வாக்கு வங்கிகள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தெல்லாம் விஜயின் அரசியல் வெற்றிக்கு பாடுபடும் பெருந்தொகை மக்களுன் விருப்புடன் வெற்றிவாகை சூடுவார். ஆக குறைந்தது விஜய் இல்லாமல் எந்தக்கட்சியும் அரசமைக்க முடியாத நிலை தோன்றும் ,அல்லது கூடியது பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லுவார்.

ஆக மொத்தத்தில் விஜய் இல்லாமல் இம்முறை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் நாற்காலி முழுமை பெறாது ! இதுவரை தபால் வாக்குகளில் 80% விஜய்க்கே கிடைத்துள்ளது.

இன்றைய கடைசிக்கட்ட பரப்புரைக்காக சென்ற வேற்று அரசியல் கட்சிகளான திமுக , தேமுதிக, கொடிகளோடு சென்ற மாற்றுக்கட்சியினர் கூட விஜய்க்காக கூக்குரலிட்டு தம் ஆதரவைத்தெரிவித்தது எதைக்காட்டுகிறது என்றால் பல கட்சிகளில் இருப்போர்கூட தமது கட்சிக்கொடியைக் கொண்டுதிரிந்து வாக்கு சேகரிப்பில் வாங்கிற பணத்துற்கு வேலை செய்ய வந்த போதும் , வாக்குச்சாவடியில் மனம் மாறி விசில் சின்னத்திற்கே வாக்கு பட்டனை அழுத்துவார்கள்.

மொத்தத்தில் அவதூறு பரப்பியவர்களும் மனச்சாட்சியின்றி விஜய்க்கு சேறுபூச நினைப்பவர்களும்கூட ஏன் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் பல நடிக நடிகைகள் கூட விஜய் வென்று முதல்வரானால் பூங்கொத்துடன் வாழ்த்து தெரிவிக்க ரஜனி கமல் தொடக்கம் சீரியல் நடிகர் நடிகைகள் வரை பல்லை இளித்தபடி செல்வர் ; அதையும் விஜய் முகம் சுழிக்காமல் சந்திப்பார் ! 

images/content-image/1776878245.jpg

காயங்களை மறக்கலாம் ! ஆனால் காயங்கள் தந்த வடுக்களை விஜய் எப்போதும் மறந்துபோகக் கூடாது . சில குளறுபடிக்கட்சிகள் தோற்றதும் மக்கள் சினிமா மோகத்தில் தற்குறிகளாக வாக்களித்துவிட்டனர் என நொண்டிச்சாக்குச்சொல்லி தம் தோல்விக்கு பதியபாடம் கற்பிப்பர். 

தமக்கு வாக்களித்தால் இதே மக்கள் புத்திஜீவிகள் என்றும், விஜய்க்கு வாக்களித்தால் அதே மக்கள் தற்குறிகள் என்றும் பட்டம் சூட்டுவர் . மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதை ஜனநாயகமாக கொள்ளத்தெரியாமல் அரசியல் பாடம் ஆண்டாண்டுகாலமாய் நடாத்த இது 1960-2022 இல்லை தம்பி கைக்குழந்தைகள் கூட வாக்கு சேகரிக்கும் காலம் 2026 இந்தப்புரட்சியில் பலர் பொசுங்கிப்போவர் அடுத்த தேர்தலில் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் இளைஞர் பட்டாளம் அரசியல் தெளிவோடே பயணிப்பர் . 

விசில் சத்தம் கேட்க்குதா ? மே மாதம் 4 ம்திகதி தமிழகம் மட்டுமல்ல உலகப்பரப்பில் தமிழர் வாழ்விடங்களும் விசில்சத்தத்தால் நிரம்பி வழியும் ! விஜய் வரவால் ஈழத்தமிழர் எதிலிகள் முகாம் வாழ் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று பரவட்டும் . அவர்களின் அடிப்படை மனிதாபிமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட விஜய் தனது அதிகாரத்தை பயன்படுத்திட வேண்டும் . 

வீட்டுவசதி , கழிப்பறை வசதி , வேலைவாய்ப்பு , கடவுச்சீட்டு போன்றவற்றை வழங்கிட உதவிடவேண்டும் . அங்கு முகாம்களில் வாழும்மக்களின் பரிதாபநிலையை இன்றுவரை எவனுமே கவனிக்கல ..! ஏன் இவர்களுக்காக குரல்கூட கொடுக்கல.! விஜய் ஆவது இந்த தொப்புள்கொடி உறவுகளின் பெருந்துயரில் சிலதையாவது விரைந்து நீங்கிவைப்பார் என நம்புவோம் . வென்றாகவேண்டும் விசில் அதற்கு ஒன்றாக ஏண்டும் தமிழக மக்கள் ! 

நன்றி தீவகன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!