இஸ்ரேலில் இயேசு சிலையை உடைத்த ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை

#God #Prison #Israel #Lanka4 #Soldiers #statue #Lebanon
Prasu
2 months ago
இஸ்ரேலில் இயேசு சிலையை உடைத்த ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை

லெபனான் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளின் போது, ​இஸ்ரேல் வீரர் ஒருவர் சுத்தியலால் இயேசு கிறிஸ்து சிலுவையை உடைக்க, மற்றொரு வீரர் அதை புகைப்படம் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அந்த இரு வீரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. வீரர்களின் நடத்தை, ராணுவத்தின் உத்தரவுகளை மீறுவதாகும் எனக் கூறி 30 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

வீரர்களின் இச்செயலை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் கண்டித்திருந்தனர். 

மத கட்டிடங்கள் மற்றும் கலைப்பொருட்களைக் கையாள்வதற்கான ராணுவ நெறிமுறைகள் அப்பகுதியில் உள்ள வீரர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4