ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

#world_news #Earthquake #Lanka4 #Japan #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகல் ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களுக்கு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA) சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட் (Iwate), அமோரி (Aomori) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகளுக்கு 3 மீற்றர் (9.84 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் (Seismic Intensity Scale) இது 'அப்பர் 5' (Upper 5) எனப் பதிவாகியுள்ளது. இத்தகைய அதிர்வுகள் ஏற்படும் போது மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது கடினமாக இருக்கும்.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல் அலைகளின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4