சாம்பலான கனவுகள்! பட்டாசு ஆலை விபத்தில் 24 உயிர்கள் பலி
#India
#Accident
#Lanka4
#Factory
#Killed
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 weeks ago
தமிழ்நாடு விருதுநகர் அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பெண்கள் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களில் 20 உடல்களுக்கான உடற்கூறாய்வு (Post-mortem) தற்போது நிறைவடைந்துள்ளது.
எஞ்சிய 4 உடலங்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வுப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக நெல்லை மற்றும் மதுரையில் இருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு மற்றும் அடையாளப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )