மரத்தான் வரலாற்றில் புதிய புரட்சி : மனிதர்களை திகைப்பில் ஆழ்த்திய இயந்திர மனிதர்கள்!

#world_news #history #Road #ImportantNews #marathon #L4
Lakhi
3 hours ago
மரத்தான் வரலாற்றில் புதிய புரட்சி : மனிதர்களை திகைப்பில் ஆழ்த்திய இயந்திர மனிதர்கள்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று நடைபெற்ற சர்வதேச அரை மரத்தான் போட்டியில், மனித உருவிலான ரோபோக்கள் மனிதர்களின் உலக சாதனையை முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன. 13 மாகாணங்களில் இருந்து சுமார் 112 குழுக்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 'ஹானர்' (Honor) நிறுவனத்தின் 'பிளாஷ்' (Flash) என்ற ரோபோ 21.09 கி.மீ தூரத்தை வெறும் 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. இது உகாண்டா வீரர் ஜேக்கப் கிப்லிமோவின் தற்போதைய உலக சாதனையை விட சுமார் 7 நிமிடங்கள் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே போட்டியில் முதலிடம் பிடித்த ரோபோ 2 மணிநேரம் 40 நிமிடங்களை எடுத்துக்கொண்ட நிலையில், ஓராண்டு காலத்தில் சீனத் தொழில்நுட்பம் மூன்று மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. எலைட் தடகள வீரர்களைப் போன்றே 95 செ.மீ நீளமுள்ள கால்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோக்களில், அதிகப்படியான வெப்பத்தைத் தணிக்க ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் 'லிக்விட் கூலிங்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 40 சதவீதத்திற்கும் அதிகமான ரோபோக்கள் எவ்வித ரிமோட் கட்டுப்பாடும் இன்றி, அவற்றில் பொருத்தப்பட்ட AI சென்சார்கள் மூலம் சுயமாகப் பாதையை அறிந்து ஓடின. இந்த வெற்றியின் மூலம் 2026ஆம் ஆண்டில் 20,000 ரோபோக்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில் உலக வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் மீட்புப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!