மே 20 முதல் பணிநீக்க நடவடிக்கை தொடக்கம் - மெட்டா நிறுவனத்தின் புதிய திட்டம்.

#world_news #Lanka4 #Meta #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
மே 20 முதல் பணிநீக்க நடவடிக்கை தொடக்கம் - மெட்டா நிறுவனத்தின் புதிய திட்டம்.

மெட்டா நிறுவனம் இந்த ஆண்டிற்கான தனது முதல் கட்ட பாரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்வரும் மே 20 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் சுற்றில் மெட்டா தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேரை, அதாவது கிட்டத்தட்ட 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

ஆண்டின் இரண்டாம் பாதியிலும் கூடுதல் ஆட்குறைப்புகளைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், அதன் திகதிகள் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4