பிரான்சில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அழைப்பு

#France #Women #government #Lanka4 #holiday
Prasu
5 hours ago
பிரான்சில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அழைப்பு

அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என CGT தொழிற்சங்க தலைவர் சோபி பினெட் தெரிவித்துள்ளார். 

தற்போது சராசரியாக 11 அரசு விடுமுறை நாட்கள் உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 12 ஆக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு, பெண்களின் உரிமைக்கான சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் திகதியை , மே 1ம் திகதி தொழிலாளர் தினம் போலவே கட்டாய விடுமுறை, வேலை இல்லாத மற்றும் சம்பளத்துடன் கூடிய நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மே 1ம் திகதி வெதுப்பகம் மற்றும் பூக்கடை வியாபாரிகள் வேலை செய்ய அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், CGT அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய தீர்வு வேலை நேரத்தை அதிகரிப்பது அல்ல, மாறாக சம்பளத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!