புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு: இருவர் கைது!

#SriLanka #Arrest #Police #ImportantNews #Public #turtle #Puththalam #L4
Lakhi
4 hours ago
புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு: இருவர் கைது!

புத்தளம், கரம்பை பகுதியில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான 10 'கல் ஆமைகள்' (Star Tortoises) சகிதம் இரு சந்தேக நபர்களை புத்தளம் ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயதுடைய புத்தளத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆமைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது பெரிய அளவிலான கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து புத்தளம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட ஆமைகள் மேலதிக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!