அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு: 'பொடி பெட்டி'யை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!
#SriLanka
#Attack
#Lanka4
#GunShoot
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
காலி அஹுங்கல்ல, லோகஸ்வத்த மயானத்திற்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 'பொடி பெட்டி' என்பவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் 'பொடி பெட்டி' எவ்விதக் காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 'லொக்கு பெட்டி'யின் சகோதரரே இந்த 'பொடி பெட்டி' என காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )