திருகோணமலையில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் துயரம்.
பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் பெற்றோருக்காக பிள்ளைகள் அவ்வாறு செய்வது அரிது! அதில் ஒன்றுதான் இலங்கையில் இன்று நடந்த சம்பவம்!! ஒரு தந்தையின் உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரையே துச்சமாய் மதித்து மரணித்துப்போன மூன்று மகன்கள்! மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் ஆற்றில் நீராடச் சென்றபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார். அவரைக்காப்பாற்ற அவருடைய நான்கு மகன்களும் ஆற்றின் ஆழத்திற்குள் சென்றிருந்த வேளையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவ்வாறு காணாமல் போனவர்களின் சடலங்கள் இன்று உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தபோதே புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தோடு ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த வேளையே இச்சம்பவம் நடைபெற்றது.
குறித்த காணாமல் போனவர்களை காப்பாற்ற கடற்படையிடம் உதவி கேட்டும் "முதலைகள் இருப்பதாகக் கூறி கடற்படையினர் ஆற்றில் இறங்க மறுத்துத் திரும்பிச் சென்றுவிட்டனர்" என்று அங்கிருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து காணாமல் போன மூன்று சகோதரர்களில், இருவரின் உடல்களைப் பின்னர் பிரதேசவாசிகளே கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் மாலை நிகழ்ந்துள்ளது, சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரதேசமே சோக மயமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )