அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அடுத்த கட்ட நடவடிக்கையை இன்று ஈரான் அறிவிப்பு!

#America #world_news #today #Iran #ImportantNews #L4
Lakhi
3 hours ago
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அடுத்த கட்ட நடவடிக்கையை இன்று ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதா என்பது குறித்து ஈரான் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வ மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழுவிற்கும், ஈரானிய அதிகாரிகளுக்கும் இடையே இன்று நடைபெறவுள்ள முக்கிய சந்திப்பிற்குப் பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்படவுள்ளது.


லெபனானில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதை ஈரான் ஒரு "சாதகமான அறிகுறியாக" கருதுகிறது. பேச்சுவார்த்தைகளில் மேலதிக முன்னேற்றம் என்பது அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். வோஷிங்டன் ஒரு "தர்க்கரீதியான கட்டமைப்பிற்குள்" நின்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதீத கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமோ அல்லது போர்நிறுத்தத்திற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதன் மூலமோ இராஜதந்திரப் பாதையை சீர்குலைக்க வேண்டாம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தைகளுக்கான இணக்கம் எட்டப்பட்டால் மட்டுமே, வரும் ஏப்ரல் 21 அன்று முடிவடையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!