மல்லாவி வைத்தியசாலையில் மருத்துவரின் கவனயீனத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்
#SriLanka
#Student
#Hospital
#doctor
#Lanka4
Prasu
1 month ago
துணுக்காய் பாடசாலை தரம் 6ல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவருக்கு அதே பாடசாலையில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரால் கடந்த 02.04.2026 அன்று பாடசாலையில் மரக்கட்டையினால் தலையில் அடிக்கப்பட்டு காயமுற்ற நிலையில் மாணவனை மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை மேற்கொண்ட போது தலை காயத்திற்குள் இருந்த மரக்கட்டை துண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மாணவனுக்கு தலை வீக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்கு பின் இன்று ஐயன்குளம் வைத்தியசாலை வைத்தியரால் கண்டு பிடிக்கப்பட்டு மரக்கட்டை வெளியேற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )