IPL M23 - பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
#Lanka4
#IPL
#T20
#Lucknow
#Bengaluru
#2026
Prasu
3 hours ago
2026 ஐபிஎல் தொடரின் 23வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ அணி சார்பில், மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களும் முகுல் சௌத்ரி 39 ஓட்டங்களும் அடித்தனர்.
இந்நிலையில், 147 என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி சார்பில், ரஜத் பட்டிதார் 27 ஓட்டங்களும் விராட் கோலி 49 ஓட்டங்களும் ஜிதேஷ் சர்மா 23 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
(வீடியோ இங்கே )