களுவாஞ்சிகுடி: 57.5 கிலோகிராம் பாவனைக்கு உதவாத கோழிகளின் இறைச்சி பறிமுதல்!

#SriLanka #Batticaloa #Health #ImportantNews #meat #seize #L4
Lakhi
3 hours ago
களுவாஞ்சிகுடி: 57.5 கிலோகிராம் பாவனைக்கு உதவாத கோழிகளின் இறைச்சி பறிமுதல்!

சித்திரை புத்தாண்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் களுவாஞ்சிகுடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது பாவனைக்கு உதவாத 57.5 கிலோ கிராம் கோழி இறைச்சி மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக, களுவாஞ்சிக்குடி பகுதியில் இயங்கும் கோழி இறைச்சி விற்பனை தளம் ஒன்றில், இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனைக்கு இருந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள இறைச்சி விற்பனைத் தளங்கள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, இறைச்சி விற்பனையகம் ஒன்றில்,ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோகிராம் இறைச்சி விற்பனைக்காக குளிர்சாதனப்பட்டியில், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வர்த்தகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும் பொதுச் சுகாதார பரிசோதர்களினால் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!