சுவிஸ் நெடுஞ்சாலைகளில் பேரூந்து தரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்தினால் 2000 வரை தண்டம்
சுவிற்சர்லாந்தில் இரண்டாயிரம் சுவீஸ் ப்ராங்கு வரைக்கும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில் புதிய கட்டுப்பாட்டு விதி ஒன்று நீதிமன்றத்தால அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 வருடங்களுக்கு இது இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, A1 நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்துவதற்கு சில சேவை நிலையங்கள் உண்டு.
இந்த சேவை நிலையங்கள் உள்ள நிறுத்துமிடங்களில் உங்களது சொந்த வாகனங்களை நிறுத்தினால் உங்களுடைய குற்றத்தைப் பொறுத்து இரண்டாயிரம் சுவீஸ் ப்ராங்கு வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த காலங்களில் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கபட்ட போதிலும் இத்தகைய செயல்கள் தொடர்ந்ததால் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இனி வரும் காலங்களில் குறித்த இடத்தில் உங்களுடைய சொந்த வாகனங்களை நிறுத்தினால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்.
மேலும், இந்த முக்கியமான விடையத்தை நமது உறவுகளுக்கும் பகிரவும். நன்றி
(வீடியோ இங்கே )