சித்திரைப் புத்தாண்டு 2026: பிறப்பு மற்றும் சுப நேரங்கள்!

#SriLanka #Festival #world_news #Tamil #New Year #ImportantNews #L4
Lakhi
2 months ago
சித்திரைப் புத்தாண்டு 2026: பிறப்பு மற்றும் சுப நேரங்கள்!

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அதற்கான சுப நேரங்கள் மற்றும் ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தாண்டு பிறப்பு

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி: இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று முற்பகல் 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

மருத்து நீர் மற்றும் நீராடல்

புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புண்ணிய காலம்

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான மற்றும் பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்:

நேற்று இரவு 08:57 க்குத் தொடங்கி, இன்று முற்பகல் 09:45 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் ஆலய தரிசனம் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.

கைவிசேடம் மற்றும் ஆடை

இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தாண்டுக்கான மங்களகரமான ஆடையாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் சகலருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4