போதகரின் திருவிளையாடல்- உடந்தையான இருவர் பொலிசாரால் கைது - போதகரிடமும் விசாரணை!

#SriLanka #Arrest #Kilinochchi
Soruban
1 hour ago
போதகரின் திருவிளையாடல்- உடந்தையான இருவர் பொலிசாரால் கைது - போதகரிடமும் விசாரணை!

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வவுனிக்குளம் குள பகுதி ஒன்றில் மல்லாவி திருச்சபை ஊழியர் ஏற்பாடு செய்துள்ளார்.

தனது பொறுப்பில் உள்ள சிறுவர் அபிவிருத்தித் திட்ட ஊழியர்கள் (சுமார் 15 பேரை) ஒன்றிணைத்து குறித்த கொண்டாட்டம் வவுனிக்குள குளக்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொண்டாட்டம் முடித்து ஏனைய ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களில் வீடு திரும்பியுள்ளனர்.

20, மற்றும் 21 வயதுடைய இரண்டு யுவதிகள் வாகனம் இல்லாமையால், தனது வாகனத்தில் ஏற்றி குறித்த வாகனம் குளக்கட்டின் முடிவு வரை பயணித்துள்ளது.

பயணத்தில் மயக்கமுற்ற யுவதிகளை குறித்த ஊழியர்(போதகர்) மற்றும் பயணித்த இரண்டு திட்ட ஊழியர்கள் இணைந்து கூட்டு பாலியல் முயற்சி செய்ததாக மல்லாவி பொலிஸில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமக்கு வைன் வழங்கப்பட்டதாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது

சம்பவத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட யுவதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மல்லாவி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை செலுத்திய சாரதியும் மற்றுமொருவரும் போலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத போதகர் உட்பட மூவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதாக மல்லாவி போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!