அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் பாகிஸ்தான்!

#America #world_news #Attack #Pakistan #War #Iran #ImportantNews #L4 #IranVsIsrael
Abi
2 months ago
அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் பாகிஸ்தான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் நடத்துவது, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கே பெருமைக்குரிய தருணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக மோதலில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ஈரானும், தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வந்துள்ளன. "இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, சர்வதேச அளவில் நாடு ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளதைக் காட்டுகிறது" என அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, உலகளாவிய அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4